மகராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் வதர்வாடியில் குடிசைகள் நிறைந்த பகுதியில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மீட்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
விபத்தில் 30 குடிசைகள் தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்தன. தீ விபத்தின்போது வீடுகளில் இருந்த எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால் பெரும் சேதம் ஏற்பட்ட போதும் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.