குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்ற மகாராஷ்டிரா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி தனது கட்சித் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
சி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய அவர், ”பாஜகவும் சங்பரிவாரும் அவர்களின் மோசமான விளைவுகளால் தோற்கடிக்கப்படுவார்கள்.
பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலமான மகாராஷ்டிராவில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று ஏஐஎம்ஐஎம் கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.
இந்தப் பேரணியில் பட்டியல் இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்பட பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: கர்நாடக பள்ளி மீது தேச துரோக வழக்கு - அப்படி என்ன செய்தார்கள்?