தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி துணிக் கிடங்கில் தீ விபத்து - 9 பேர் உயிரிழப்பு! - டெல்லி தீ விபத்து

டெல்லி: இன்று அதிகாலை துணிக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Delhi
Delhi

By

Published : Dec 23, 2019, 9:24 AM IST

டெல்லியில் தீ விபத்து ஏற்படுவது தொடர் கதையாகியுள்ளது. இந்நிலையில், கிராரி பகுதியில் உள்ள துணிக் கிடங்கில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில், சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். காயம் அடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், அனஜ் மண்டி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் டிசம்பர் 8ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில், சிக்கி 43 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜார்க்கண்ட் தேர்தல் - முதலமைச்சர் பதவியை தக்கவைப்பாரா ரகுபர் தாஸ்?

ABOUT THE AUTHOR

...view details