நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உயர்வை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் உடுப்பியில் வெங்காயம் விலை உயர்வுடன் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் எதிராக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜி கௌடா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக சென்றவர்களுக்கு வெங்காய பக்கோடா கொடுக்கப்பட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் விலை உயர்வைக் கண்டித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன.