தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரணாப் படத்திற்கு புதுச்சேரியில் மலரஞ்சலி - சட்டப்பேரவை

புதுச்சேரி: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உருவப்படத்திற்கு சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

homage
homage

By

Published : Sep 1, 2020, 4:24 PM IST

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று (ஆக.31) காலமானார். அவரது உடல் டெல்லியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. அப்போது, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பிரணாப்பின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் லோதி மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் பிரணாப் உடல் தகனம் செய்யப்பட்டது.

பிரணாப் முகர்ஜிக்கு அஞ்சலி

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பிரணாப் முகர்ஜியின் உருவப்படத்திற்கு பலரும் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ படத்திற்கு, பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து, துணைத் தலைவர் பாலன், சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை செயலர் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

பிரணாப் படத்திற்கு புதுச்சேரியில் மலரஞ்சலி

இதையும் படிங்க: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இறுதி அஞ்சலியில் முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்பு!

ABOUT THE AUTHOR

...view details