என்.ஆர். காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயபால், சட்டப்பேரவை காவலர் உள்ளிட்ட 6 பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, நோய் தடுப்பு நடவடிக்கையாக சட்டப்பேரவை வளாகத்தை மூடும்படி பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து, முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள், அலுவலர்கள் என சட்டப்பேரவையின் அனைத்துப் பணியாளர்களும் கரோனா கண்டறிதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். எனினும், நல்வாய்ப்பாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.
மீண்டும் திறக்கப்பட்டது புதுச்சேரி சட்டப்பேரவை! - கரோனா
புதுச்சேரி: சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவருக்கு கரோனா தொற்று பரவியதையடுத்து ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த புதுச்சேரி சட்டப்பேரவை இன்று(ஆகஸ்ட் 3) மீண்டும் திறக்கப்பட்டது.
assembly
இந்நிலையில், கிருமி நாசினி கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டு மூடப்பட்ட சட்டப்பேரவை ஒருவார காலத்திற்குப்பின் இன்று (ஆகஸ்ட் 3) மீண்டும் திறக்கப்பட்டது. இதனால், ஒரு வாரமாக தேங்கியிருந்த பேரவை அலுவல் பணிகள், இன்று முதல் மீண்டும் தொடங்கின. முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இன்று சட்டப்பேரவைக்கு வந்து தங்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: கர்நாடக முதலமைச்சர் மகளுக்கு கரோனா பாதிப்பு!