தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஏழு நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்' - முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல் - புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம்

புதுச்சேரி: ஏழு நாள்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள், அலுவலர்கள் ஆகியோர் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

puducherry
puducherry

By

Published : Jul 25, 2020, 5:02 PM IST

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இதில் 2020-21ஆம் ஆண்டிற்கான 9 ஆயிரம் கோடிக்கான நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று தனது உரையை நிகழ்த்தினார். இதில் பங்கேற்ற என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சட்டப்பேரவை மண்டபம், அமைச்சர்கள் அறைக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவை நுழைவு வாயில் முன்பு திறந்த வெளியில் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில், சட்டப்பேரவைக் கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்தில் என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. காங்கிரஸ், அதிமுக, திமுக எம்எல்ஏக்கள் ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர்.

கூட்டத்தொடரில் நடைபெற்ற நிகழ்வுகள் பின்வருமாறு:

அதிமுக எம்எல்ஏ அன்பழகன்: சட்டப்பேரவை கூட்டத்திற்கு முன்பு உறுப்பினருக்குப் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அரசின் அலட்சியத்தால் ஆளுநர், அரசுச் செயலர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

முதலமைச்சர் நாராயணசாமி: ஒரு உறுப்பினருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மற்றவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை அலுவலர்கள் அறிவுறுத்தினர். வருகின்ற திங்கட்கிழமை சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பத்திரிகையாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படும்.

திமுக எம்எல்ஏ சிவா: அனைத்துத் திட்டங்களையும் நிறுத்திவிட்டு, கரோனாவால் முடங்கியுள்ள மக்களுக்கு உதவிட அனைத்துக் குடும்பத்திற்கும் 5 ஆயிரம் ரூபாய், 30 கிலோ அரிசி வழங்க வேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க சட்ட வரையறை இயற்ற மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிந்துரை வந்தவுடன் சட்டசபை கூடி சட்டம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் நாராயணசாமி: சட்டப்பேரவை வளாகத்தில் கரோனா பரிசோதனை வருகின்ற திங்கட்கிழமை நடக்கிறது. ஏழு நாள்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள், அலுவலர்கள் ஆகியோர் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.


இதையும் படிங்க:
'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும்' - வைகோ வலிறுத்த
ல்

ABOUT THE AUTHOR

...view details