தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 28, 2020, 2:21 PM IST

ETV Bharat / bharat

உணவுத் தேடி சரணாலயத்திலிருந்து வெளிவந்த காண்டாமிருகங்கள்!

அஸ்ஸாம் மாநிலத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறையால், சரணாலயத்திலிருக்கும் காண்டாமிருகங்கள் உணவுத் தேடி குட்டிகளுடன் குடியிருப்பு பகுதிக்குள் வந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

assam-rhinos-escape-sanctuary-in-search-of-food-amid-floods
assam-rhinos-escape-sanctuary-in-search-of-food-amid-floods

அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இதுவரை 56 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 மாநிலங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. 102 பேர் இந்த வெள்ளத்திற்கு உயிரிழந்தனர். காசிரங்கா தேசிய விலங்கியல் பூங்காவில் 132 விலங்குகள் பலியாகியுள்ளன.

இந்தக் கடுமையான வெள்ளத்தால் விலங்குகள் பூங்காவிலிருந்து மாற்று இடத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டன. ஆனால் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறை காரணமாக காண்டாமிருகங்கள் தங்களது குட்டிகளுடன் உணவுத் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்துள்ளன.

இது குறித்து வன அலுவலர் ஜித்தேந்திர குமார் பேசுகையில், ''காசிரங்கா தேசிய பூங்காவின் வரலாற்றில் முதல்முறையாக காண்டாமிருகங்கள் தனது குட்டிகளுடன் உணவுக்காக எல்லைத் தாண்டியுள்ளன. இந்த வெள்ளத்தால் உணவு பற்றாக்குறை அதிகமாகியுள்ளது.

காண்டாமிருகங்கள் உணவுக்காக வெளிவந்தபோது, குடியிருப்பு பகுதிகளில் இருந்தவர்கள் விலங்குகளுக்கு உணவு வழங்கியுள்ளனர். அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்'' என்றார்.

இதையும் படிங்க:அசாம் வெள்ளம்: இரங்கல் தெரிவித்த ரஷ்ய அதிபர்

ABOUT THE AUTHOR

...view details