வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் வங்கதேசத்தைச் சேர்ந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் சட்டவிரோதமாக குடியேறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டுபிடித்த வெளியேற்றும்வகையில், என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (1951) புதுப்பிக்கமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.
அதன்படி, அம்மாநிலத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி என்.ஆர்.சி.இன் இறுதிப் பட்டியல் வெளியானது. இதில், மூன்று கோடியே 11 லட்சத்து 21 ஆயிரத்து நான்கு பேர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல, 19 லட்சத்து ஆறாயிரத்து 657 பேர் விடுபட்டுள்ளனர்.
இதில், உண்மையான இந்தியர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதாகவும், சட்டவிரோத குடியேறிகளின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாகவும் எழுந்த புகாரையடுத்து, இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தகுதியற்ற நபர்களின் விவரங்களைக் கண்டறியுமாறு என்.ஆர்.சி. ஒருங்கிணைப்பாளர் ஹித்தேஷ் தேவ் சர்மா உத்தரவிட்டுள்ளார்.