தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கான்பூரில் மாடலிங் பெண் பாலியல் வன்புணர்வு - Assam model raped

கான்பூர்:நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வந்த மாடலிங் பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகப்பட்டுள்ள கொடுமை அரங்கேறியுள்ளது.

Assam model
Assam model

By

Published : Mar 17, 2020, 3:05 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த 25 வயதுள்ள பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மாடலிங் தொழிலை மேற்கொண்டுவரும் அப்பெண் அசாமைச் சேர்ந்தவராவார்.

பின்னர் இதுகுறித்த அப்பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அப்பெண்ணை வன்புணர்வு செய்த குற்றத்திற்காக ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ”அந்தப் பெண் பங்கேற்ற நிகழ்ச்சியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமீர் அகர்வால் என்பவர் சமீர் அகர்வாலின் இல்லத்தில் தன்னை கட்டாயப்படுத்தி வன்புணர்வு செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். அங்கு பணிபுரிந்த ஊழியர்களும் இந்தக் குற்றத்திற்கு துணையாக இருந்துள்ளனர். அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டுள்ள அப்பெண் மருத்துவப் பரிசோதனைக்காக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்றார்.

இதையும் படிங்க:மாணவிகளிடம் பாலியல் சீண்டல் - ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ!

ABOUT THE AUTHOR

...view details