நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது. லாக்டவுன் தற்போது நான்காவது கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாடு முழுவதும் பாதிப்பு குறைவான பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு போக்குவரத்து மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிவருகிறது.
இந்நிலையில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கரோனா நோய் தொற்று தற்போது அதிகரிக்கத் தொடங்கியது கவலை அளிப்பதாக அம்மாநில முதலமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பத்தில் அங்கு கரோனா பாதிப்பு பெரிதும் பதிவாகாத நிலையில், கடந்த சில நாள்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அசாம் மாநிலத்தில் 44 புதிய நோய் தொற்று பதிவாகியுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 185 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.