கேரள மாநிலம் அன்சள் பகுதியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் அலி வசித்துவருகின்றார். இவர் தனது நண்பரான அஸ்வெல்லாஸின் நெருங்கிய உறவினர் ஜலாலுதீனை கழுத்தில் வெட்டி படுகொலை செய்தார்.
பின்னர், தனது செல்ஃபோன் மூலம் வீடியோ எடுத்த அப்துல் அலி அந்த காட்சிகளை ‘லைக்’ என்னும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பின்னர், அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் வந்து பார்த்துள்ளனர்.
ஆனால், அப்துல் அலி கையில் கத்தியை வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டியுள்ளார். இதனால், அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் வெளியேறினர்.
பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினரும், பொதுமக்களும் அப்துல் அலியை நோக்கி சென்றனர். அப்போது அவர் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதையடுத்து, அப்துல் அலியை மீட்ட காவல் துறையினர் அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், குற்றத்தின் பின்னனி குறித்து அவர் கொடுக்கும் வாக்குமூலம் மூலமே தெரியவரும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகவலைதளத்தில் பரப்பப்பட்ட வீடியோ இதையும் படிங்க: கடலூர் அருகே பட்டப்பகலில் கள்ளச்சாராய விற்பனை: காணொலி வைரல்!