நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தது. அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் வெற்றி பெற்றாலும் அமேதி தொகுதியில் தோல்வியடைந்தார். கட்சியின் தோல்விக்குப் பொறுப்பெற்று ராகுல் காந்தி பதவி விலகுவதாக அறிவித்தார். அவரது ராஜினாமா இதுவரை ஏற்கப்படவில்லை. ஆனாலும் பதவி விலகுவதில் ராகுல் காந்தி உறுதியாகவுள்ளார்.
‘காங்கிரஸ் தலைவராக ராகுல் தொடர வேண்டும்’ - அசாம் காங்கிரஸ் தலைவர் - assam congress leader
திஸ்பூர்: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தொடர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் அசாம் மாநிலத் தலைவர் தருண் கோகாய் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் தருண் கோகாய், "குழப்பங்கள் தீர்ந்தவுடன் ராகுல் காந்தியே தலைவராகத் தொடர வேண்டுமென்பதே எங்கள் விருப்பம். அவர் தொடர்ந்து மறுத்தால் மாற்று வழிகளை தாமதமின்றி விரைவில் செயல்படுத்த வேண்டும்" என்றார்.
மேலும், "காங்கிரஸின் புதிய தலைவர் நேரு குடும்பத்திலிருந்து இருக்கக்கூடாது என்பதில் ராகுல் காந்தி உறுதியாகவுள்ளார். இல்லையெனில், சோனியா காந்தியை மீண்டும் தலைவராக்கி இருப்போம், ஆனால் அவரும் (சோனியா) மீண்டும் கட்சிக்கு தலைமை வகிக்க ஆர்வம் காட்டவில்லை" என்றார்.