தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நெருங்கும் அஸ்ஸாம் தேர்தல், தாக்கத்தை ஏற்படுத்துமா புதிய கட்சிகள்! - New political parties in Assam

அஸ்ஸாம் மாநிலத்தில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உருவாகும் புதிய கட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்துமா எனக் கேள்விகள் எழுந்துள்ளன.

Assam
Assam

By

Published : Aug 26, 2020, 8:25 PM IST

திஸ்பூர்:அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.

இதையடுத்து, முதலமைச்சராக சர்பானந்தா சோனாவால் பொறுப்பு ஏற்றார். 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பல முக்கிய பிரமுகர்கள் புதிய கட்சிகளை உருவாக்கியுள்ளனர்.

அன்சலிக் கான்ஸ் மோர்ச்சா என்ற கட்சியை மாநிலங்களவை உறுப்பினரும் பத்திரிகையாளருமான அஜித் புயானும், அசாம் சங்ராமி மான்சா என்ற கட்சியை அதிப் ஃபுகானும் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், புதிய கட்சியை தொடங்கும் நோக்கில் அனைத்து அஸ்ஸாம் மாணவர் அமைப்பு பல்வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது.

மேலும், கலகுரு பிஷ்ணு பிரசாத் ரபாவின் மகன் பிருத்விராஜ் ரபா, “பிஹு சமூகங்கள் மற்றும் குழுக்கள் முறையில் அரசியல் கட்சிகளை உருவாக்குவது பயனற்றது” என்று கூறினார்.

மேலும், “அவர்களின் முயற்சிகள் பலனளிக்க வேண்டும் என்றால் அவர்கள் இனம்,மொழி உள்ளிட்ட தடைகளைத் தாண்டி ஒன்றிணைய வேண்டும்" என்றும் கூறினார்.
இது குறித்து அஸ்ஸாம் குடிமகன் ஒருவர் கூறுகையில், “அனைத்து கட்சிகளும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை முக்கிய விவகாரமாக கையில் எடுத்துள்ளன. ஆளும் பாஜக அரசை தோற்கடிப்பதும் அவ்வளவு எளிது அல்ல. எதிர்க்கட்சிகள் குழப்பத்தில் இருந்தால், அது நிச்சயம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக முடியும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம்: நிலைமையில் தொடர் முன்னேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details