தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தலைமறைவான டிஐஜி தத்தா இந்தோ-நேபாள எல்லையில் கைது! - ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி பி.கே. தத்தா

கவுஹாத்தி: அஸ்ஸாம் காவல் துறை தேர்வில் முறைகேடு செய்த வழக்கில் தேடப்பட்டுவந்த ஓய்வுபெற்ற டிஐஜி பி.கே. தத்தாவை இந்தோ-நேபாள எல்லையில் பாதுகாப்புப் படையினர் கைதுசெய்தனர்.

தலைமறைவான டி.ஐ.ஜி தத்தா இந்தோ-நேபாள எல்லையில் கைது!
தலைமறைவான டி.ஐ.ஜி தத்தா இந்தோ-நேபாள எல்லையில் கைது!

By

Published : Oct 6, 2020, 7:38 PM IST

Updated : Oct 6, 2020, 7:43 PM IST

அஸ்ஸாம் மாநிலத்தின் காவல் துறைக்கான ஆள்சேர்ப்பு தேர்வின் வினாத்தாளை கசியவிட்டு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அம்மாநிலத்தின் ஓய்வுபெற்ற டிஐஜி பி.கே. தத்தா மீது குற்றச்சாட்டு உள்ளது.

இந்த வழக்கில் கைதாவிலிருந்து தப்பிக்க தலைமறைவான அவரைக் கண்டுபிடிக்க சி.ஐ.டி. சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இந்நிலையில், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவரை கடந்த 1ஆம் தேதி இந்தோ-நேபாள எல்லையில் பாதுகாப்புப் படையினர் தடுத்துவைத்தனர்.

இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியாக கருதப்படும் பாஜக தலைவர் தீபன் தேகாவும் அவருடன் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

சி.ஐ.டி. வழங்கிய 'லுக் அவுட் சுற்றறிக்கை' மூலமாக இருவருடைய அடையாளமும் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் இருவரும் மேற்கு வங்க மாநில காவல் துறையினர் வசம் நேற்று ஒப்படைக்கப்பட்டனர்.

மேற்கு வங்கத்தில் தற்போது சிறைப்படுத்தப்பட்டுள்ள இந்த இருவரையும் அஸ்ஸாம் காவல் துறையினர் இன்று தங்களது மாநிலத்திற்கு அழைத்துசென்றனர்.

இந்தத் தேர்வு முறைகேடு வழக்கில் இதுவரை 33 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவர் தொடர்பான தகவல்களை அளிப்பவருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுமென அஸ்ஸாம் காவல் துறையினர் அறிவித்திருந்து கவனிக்கத்தக்கது.

Last Updated : Oct 6, 2020, 7:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details