தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அஸ்ஸாம் வெள்ளம்: 5 பேர் உயிரிழப்பு, 4 லட்சம் பேர் பாதிப்பு - தமிழ் செய்திகள்

திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் தற்போதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நான்கு லட்சமாக உள்ளது.

Assam floods
Assam floods

By

Published : May 30, 2020, 1:47 PM IST

Updated : May 30, 2020, 3:19 PM IST

இது குறித்து அஸ்ஸாம் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணைய அலுவலர்கள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கோலபாரா, ஹோஜாய் ஆகிய இடங்களில் தலா இரண்டு பேர் வெள்ளத்தால் இறந்துள்ளனர். இதுவரை மூன்று லட்சத்து 81 ஆயிரத்து 320 பேர் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாநிலத்தில் ஏழு மாவட்டங்களில் 350-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 25 ஆயிரம் ஹெக்டேர் நிலம் நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகள் இல்லாமல் தவித்துவருகின்றனர். தற்போது கரோனா தொற்று இருந்தாலும் பாதிக்கப்பட்ட அனைவரும் மாவட்ட நிர்வாகத்தால் திறக்கப்பட்ட 190 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

டாரங் மாவட்டத்தில் உள்ள ஒராங் தேசிய பூங்காவிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்கிருக்கும் விலங்குகள் முகாம்களும் பாதிக்கப்பட்டுள்ளன என வனத் துறை அலுவலர்கள் கூறியுள்ளனர். இந்தப் பூங்காவில் ஒற்றைக்கொம்பு கொண்ட 68 காண்டாமிருகங்களும், மற்ற அரியவகை உயிரினங்களும் உள்ளன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அஸ்ஸாம் வெள்ளம்: 3 லட்சம் பேர் பாதிப்பு

Last Updated : May 30, 2020, 3:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details