அஸ்ஸாமில் சில வாரங்களாக பெய்துவரும் கனமழையின் காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இது தொடர்பாக அஸ்ஸாம் பேரிடர் மேலாண்மை குழு, வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளம், நிலச்சரிவு காரணமாக இதுவரை 77 பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
அஸ்ஸாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 77ஆக உயர்வு! - அஸ்ஸாம் வெள்ள மீட்பு பணி
திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலத்தின் வெள்ள பாதிப்பால் இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளனர்.
அஸ்ஸாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 77ஆக உயர்வு!
இந்த வெள்ள பாதிப்பில் தேமாஜி, லக்கிம்பூர், பிஸ்வாநாட், ஜோர்கட், தரங், பார்பேட்டா, நல்பாரி, மஜூலி, சிரங்க், திபுருகார் உள்ளிட்ட மாவட்டங்களின் 11 லட்சம் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள மீட்பு பணிகளுக்காக 615 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போதும் 18 மாவட்டங்கள் வெள்ள பாதிப்பிலிருந்து மீளவில்லை.