வடகிழக்கு மாநிலங்களில் கடந்த ஒருவார காலமாக கடும் மழை பெய்துவருகிறது. இதனால், அசாம், திரிபுரா உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள 28 மாவட்டங்களிலும் மழைக் காரணமாக 26 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அசாமின் பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளதால், அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மூழ்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெள்ள பாதிப்புகளில் சிக்கி 13 பேர் பலியாகினர். இதுமட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 300க்கும் மேற்பட்ட பாதுகாப்பு முகாம்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.