தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அசாமில் மெல்ல மெல்ல சீரடையும் வெள்ள பாதிப்புகள்!

கௌகாத்தி: அசாமில் ஆறு மாவட்டங்களிலிருந்து மெல்ல மெல்ல வெள்ள நீர் வடிந்து வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

assam-flood-situation-improves-further-over-10000-affected
assam-flood-situation-improves-further-over-10000-affected

By

Published : Aug 8, 2020, 4:43 PM IST

நேபாள நாட்டின் எல்லையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, அஸ்ஸாம், பிகார் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதற்கிடையில், அசாம் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக அம்மாநில அரசு கூறுகிறது. கடந்த வியாழக்கிழமை(ஆக.6) முதல் போங்கைகான், கோல்பாரா, கம்ரூப் மற்றும் நாகான் ஆகிய மாவட்டங்களில் இருந்து வெள்ள நீர் வெளியேறி வருகிறது.

வெள்ள நீரால் 10 மாவட்டங்களில் வசிக்கும் 84,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ஏ.எஸ்.டி.எம்.ஏ) தேமாஜி, பக்ஸா, சிராங், கோக்ராஜர், கம்ரூப், மோரிகான் மாவட்டங்கள் மட்டுமே தற்போது வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளதாகக் கூறியுள்ளது. கோக்ராஜர் மாவட்டத்தில், நான்காயிரத்து 272 பேரும், பக்ஸா மாவட்டத்தில் மூன்றாயிரம் பேரும், மோரிகான் மாவட்டத்தில் இரண்டாயிரத்து 30 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

வெள்ள நிலைமை முன்னேற்றம் அடைந்துள்ளதையடுத்து, இரண்டு மாவட்டத்தில் அலுவர்கள் தற்போது 201 மக்கள் தங்கியுள்ள இரண்டு நிவாரண முகாம்கள் மற்றும் விநியோக மையங்களை செயல்படுத்தி வருகின்றனர். கோல்பாரா மாவட்டம், இந்த இயற்கை சீற்றத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜோர்ஹாட் மாவட்டத்தில் உள்ள நமாதிகாட்டில் பிரம்மபுத்ரா நதி ஆபத்தான மட்டத்திற்கு மேலே பாய்வதாக அலுவலர்கள் கூறுகின்றனர். ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை, 19 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியதில், 8.54 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இந்தாண்டு மட்டும், நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவற்றில் சிக்கி மொத்தம் 136 பேர் உயிரிழந்துள்ளனர். 110 பேர் வெள்ளப் பாதிப்பாலும் 26 பேர் நிலச்சரிவிலும் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்தப் பேரழிவால் இதுவரை 157 விலங்குகள் உயிரிழந்துள்ளன. மேலும் காசிரங்கா தேசிய பூங்காவில் 174 விலங்குள் மீட்கப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

ABOUT THE AUTHOR

...view details