தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அஸ்ஸாம் வெள்ள பாதிப்பு: பலி எண்ணிக்கை 107ஆக உயர்வு - பிரம்மபுத்திரா

அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 107ஆக உயர்ந்துள்ளது.

assam-flood-situation-improves-16-dot-55l-still-in-distress
assam-flood-situation-improves-16-dot-55l-still-in-distress

By

Published : Jul 30, 2020, 1:00 PM IST

அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்துவரும் வரலாறு காணாத தொடர் கனமழையால் பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளையாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் அம்மாநிலத்தின் 26 மாவட்டங்களில் உள்ள 28 லட்சம் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை ஆயிரத்து 536 கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

இந்நிலையில், அஸ்ஸாம் வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 107ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து அம்மாநில பேரிடர் மீட்பு மேலாண்மை துறை அலுவலர்கள் பேசுகையில், ''பிரம்மபுத்திரா ஆற்றின் நீரின் அளவு அபாயக் கட்டத்தில் தான் நீடிக்கிறது. அதேபோல் பருவமழையும் பல்வேறு பகுதிகளில் தீவிரமடைந்து வருகிறது. இதனால் வெள்ளப் பாதிப்பு பணிகளை சரி செய்வதில் சில பிரச்னைகள் ஏற்படுகின்றன.

காசிரங்கா தேசிய பூங்காவிலிருந்து 165 விலங்குகள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால் வெள்ளத்தால் 142 விலங்குகள் உயிரிழந்தன. பூங்காவின் 65 விழுக்காடு நிலம் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மாட்டு சாணம், கோமியத்தில் தயாராகும் சஞ்சீவ்னி ராக்கி

ABOUT THE AUTHOR

...view details