நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று தீவிரப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அஸ்ஸாம், பிகார் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. நேபாளத்தின் எல்லையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, இரு மாநிலங்களும் கடும் பாதிப்பிற்குள்ளாகின. தற்போது, இயல்பு நிலை அங்கு படிப்படியாக மாறி வருகிறது.
இருப்பினும், 15 மாவட்டத்தில் வாழும் 1.96 லட்சம் பேர் வெள்ள பாதிப்பால் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பாதிப்புக்குள்ளான இடங்களுக்குச் சென்ற அஸ்ஸாம் மாநிலத்தின் ஆளுநர் ஜெக்தீஷ் முகி, நிலைமை குறித்து ஆராய்ந்தார். வெள்ளத்தால் மூழ்கிய அஸ்ஸாமின் பார்பேட்டா, தெற்கு சல்மாரா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.93 லட்சமாக குறைந்துள்ளது என மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.