தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அஸ்ஸாமில் வெள்ளம்! பதைபதைக்க வைக்கும் பிரத்யேக காணொலி - கனமழை

திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக, அங்குள்ள புத்திமாரி ஆற்று வெள்ளநீரில் வீடு ஒன்று சரிந்துவிழும் காணொலி காட்சி நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

Assam flood

By

Published : Jul 16, 2019, 6:59 PM IST

அஸ்ஸாம், மிசோரம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அம்மாநிலத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதுவரை வெள்ளத்தால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 45 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் 90 ஆயிரம் ஏக்கர் அளவிலான விவசாய நிலங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன.

வெள்ளத்தில் சரிந்த வீடு

இந்நிலையில் பிரம்மபுத்திரா நதியின் துணை நதியான புத்திமாரியில் ஏற்பட்ட வெள்ளமானது ஊருக்குள் புகுந்தது. அப்போது அங்கிருந்த மாதப் சந்திரநாத் என்பவரின் வீடு சரிந்துவிழுந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு சரிந்துவிழுந்த காணொலி காட்சி நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details