அஸ்ஸாமில் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஐந்து மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்தக் கனமழை காரணமாக லக்கிம்பூர், தேமாஜி, திப்ருகார், தாரங், கோல்பாரா மாவட்டங்களின் எட்டு வருவாய் வட்டாரத்திற்குள்பட்ட 127 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ASDMA) தெரிவித்துள்ளது.
அதேநேரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்குவதற்காக 33 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பாதிக்கப்பட்ட எட்டாயிரத்து 941 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர்.