வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் வெள்ளத்தில், கிட்டத்தட்ட மாநிலத்தின் 25 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்பில் நேற்று மாலை வரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், பல்வேறு பொதுச் சொத்துகளும் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த 223 முகாம்களில் 143 முகாம்கள் நீரில் மூழ்கின. பூங்காவிலுள்ள ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் உள்ளிட்ட 14 விலங்குகள் வெள்ளத்தால் உயிரிழந்துள்ளன. விலங்குகளின் பாதுகாப்பிற்காக பூங்காவிலுள்ள உயரமான பகுதியில், தற்போது விலங்குகள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.