அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஏராளமானோர் தங்களது வீடு, உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 60ஆக உயர்வு! - அசாம் வெள்ள் பலி எண்ணிக்கை
திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் தீவிர வெள்ளம் காரணமாக இன்று 12 பேர் உயிரிழந்தனர். அதன்படி, வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.
assam flood
இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி நல்பாரி, துப்ரி, தென் சல்மாரா ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும், பார்போடாவில் நான்கு, மரிகோனில் ஐந்து என மொத்தம் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் 33 மாவட்டங்களில் 24 மாவட்டங்கள் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளன.