அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பாநந்தா சோனாவால், 47 ஊடகங்களைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள், தலைமை ஆசிரியர்களிடம் காணொலி மூலம் கரோனா ஊரடங்கு நிலவரம் குறித்து கலந்து ஆலோசித்தார்.
கூட்டத்தில், அண்டை மாநில எல்லையை ஒட்டியுள்ள கிராமச் சாலைகளை மூடுவது, காவல் துறையினரைப் பரிசோதிப்பது, பருவ மழைக்காலங்களில் வெள்ளம் வந்தால் பள்ளிகளை நிவாரண முகாம்களாக மாற்ற வேண்டுமா... வேண்டாமா? எனப் பல்வேறு விஷயங்கள் குறித்த பத்திரிகையாளர்களின் ஆலோசனைகளை முதலமைச்சர் கேட்டு அறிந்தார்.