வடகிழக்கு மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்ததால், சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும், மழை, வெள்ள பாதிப்பு, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.
அஸ்ஸாம், பிகாரில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 142ஆக உயர்வு! - bhiramaputhra
பாட்னா: அஸ்ஸாம், பிகாரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவரின் எண்ணிக்கை 142ஆக உயர்ந்துள்ளது.
அசாம், பீகாரில் வெள்ளம்: பலி எண்ணிக்கை உயர்வு!
பிகார் மாநிலத்தில் கனமழை வெள்ளத்தால் சுமார் 66 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மழை பாதிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 92ஆக உயர்ந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் மீட்பு பணிக்காக அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் ரூ.180 கோடி அறிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் குடகு, கேரளா மாநிலம் இடுக்கிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Last Updated : Jul 20, 2019, 10:02 AM IST