அசாமின் ஹொஜாய், முராஜ்ஹார் ஆகிய மாவட்டங்களில் உயிரிழந்தவர்களின் பெயரில் எஸ்பிஐ வங்கிக் கணக்கு ஆரம்பித்து விவசாயக் கடன் வழங்கப்படுவதாகவும், இதில் சுமார் ரூ.100 கோடி அளவில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் புகார் எழுந்தது.
அசாம்: விவசாய கடன் மோசடி வழக்கில் 18 பேர் கைது
திஸ்பூர்: விவசாய கடன் வழங்குவதில் 100 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், எஸ்பிஐ வங்கியின் முன்னாள் கிளை மேலாளர்கள் இருவர் உட்பட 18 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
SBI branch managers
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இந்த மோசடியில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் எஸ்பிஐ வங்கியின் முன்னாள் கிளை மேலாளர் தெபோஜித் தலுக்தாரை கைது செய்த நிலையில், தற்போது மற்றொரு முன்னாள் கிளை மேலாளர் சமீர் தேய் உள்ளிட்ட 17 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.