ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள துப்புதானா என்னுமிடத்தில் உள்ள ஒரு கல் குவாரியில், காவலர் கொலை செய்யப்பட்ட நிலையில், கண்டெடுக்கப்பட்டார். விசாரணையில் இறந்தவர் உதவி எஸ்.ஐ. காமேஸ்வர் ரவிதாஸ் என்பது தெரிய வந்தது.
ராஞ்சி கல்குவாரியில் கொலை செய்யப்பட்ட ஏ.எஸ்.ஐ
ராஞ்சி (ஜார்க்கண்ட்): ராஞ்சியில் உள்ள துப்புதானாவில் உள்ள ஒரு கல் குவாரியில் உதவி எஸ்.ஐ. காமேஸ்வர் ரவிதாஸ் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
asi-found-murdered-at-stone-quarry-in-ranchi
துப்புதானாவில் மருத்துவர்களின் தகவல்களின்படி, ரவிதாஸ் ஒரு கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவரது உடல், குவாரியில் 200 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டது கண்டறியப்பட்டது.
இதற்கிடையில், காவல் அலுவலர்கள் சம்பவ இடத்தை அடைந்து, இது குறித்து விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளனர். மது அருந்திய போது, இந்தக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.