”பாகிஸ்தான் நாட்டின் தேசப் பிதாவான முகமது அலி ஜின்னாவின் புதிய அவதாரமே அசாதுதீன் ஒவைசி” என மக்களவை உறுப்பினரும் பாஜக இளைஞரணித் தலைவருமான தேஜஸ்வி சூர்யா விமர்சித்துள்ளார். இது குறித்து ஹைதராபாத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தெலங்கானா வளர்ச்சிக்கு ஆதரவாகவும் குடும்ப ஆட்சிக்கு எதிராகவும் வாக்களிக்க வேண்டும். உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரை காஷ்மீர் மக்கள் தனிமைப்படுத்திவிட்டனர்.
”இவர்தான் புதிய ஜின்னாவா...” - விமர்சித்த பாஜக இளைஞரணித் தலைவர் - தேஜஸ்வி சூர்யா
ஹைதராபாத் : பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகியவை குறித்து பேசும் ஓவைசி, முகமது அலி ஜின்னா போல் செயல்பட்டுவருவதாக பாஜக இளைஞரணித் தலைவர் தேஜஸ்வி சூர்யா விமர்சித்துள்ளார்.
100 ஸ்மார்ட் சிட்டி அமைக்கும் திட்டத்தை மோடி தொடங்கி வைத்துள்ளார். தெலங்கானாவுக்காக ஒதுக்கப்பட்ட நிதி எங்கே போனது? முகமது அலி ஜின்னாவின் புதிய அவதாரமே அசாதுதீன் ஒவைசி. தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ஓவைசியின் எம்ஐஎம் ஆகியக் கட்சிகள் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ளன. துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லைபோல் ஹைதராபாத்தை மாற்ற சந்திரசேகர ராவ் முயற்சித்து வருகிறார். துருக்கி ஒரு இஸ்லாமிய நாடு. நமது நாட்டுக்கு எதிராக துருக்கி அதிபர் பேசியுள்ளார்.
இந்தியாவில் உள்ள ஹைதராபாத்தை பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத்தைப்போல் மாற்ற ஓவைசி கட்சி விரும்புகிறது. ஹைதராபாத்தை பாக்கியநகராக மாற்றுவோமே தவிர இஸ்தான்புல்லாக்க மாட்டோம். இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிகரிப்பது, பிரிவினைவாதம், தீவரவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஓவைசி பேசிவருகிறார். இதேபோன்றுதான் ஜின்னாவும் பேசினார்" என்றார்.