இந்தியாவில் புதிய கரோனா வைரஸான கோவிட்-19 பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதில் ஒரு பகுதியாக, தொழில்நுட்ப உதவியுடன் கரோனா பாதிப்புக்குள்ளான நபர் அருகில் உள்ளாரா என்பதை எச்சரிக்கும் வகையில், ஆரோக்கிய சேது என்ற செயலியை(ஆப்) மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
ஸ்மார்ட்போன்களில் செயல்படும் இந்த செயலி, தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில் செயல்படும்.
இந்த `ஆரோக்கிய சேது' (Aarogya Setu) செயலி மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக்குழு (National Disaster Management Authority) மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
இந்த செயலியை பயன்படுத்த, கூகுள் பிளே ஸ்டோரில் ஆரோக்கிய சேது செயலியை தேர்வு செய்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
செயலியை பதிவிறக்கம் செய்த உடன், எந்த மொழியில் செயல்பட வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை அளிக்க வேண்டும்.
இந்த செயலியை தற்போது நாட்டில் மூன்று கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த செயலி மூலம் கரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம். கரோனா வைரஸ் சீனாவில் தொடங்கிய போது இதே போன்ற செயலி ஒன்றை அந்நாடு அறிமுகப்படுத்தியது.
ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்த 3 கோடி இந்தியர்கள்!
இது கரோனா பாதிப்பிலிருந்து மக்கள் தற்கார்த்துக் கொள்ள பெரும் உதவியாக அமைந்தது நினைவுக் கூரத்தக்கது.