இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், "தேசிய குற்ற ஆவண தரவுகளின்படி, கடந்த ஆறு மாதங்களில் டெல்லியில் மட்டும் ஏறத்தாழ 1,400 சிறுவர்கள் (18 வயதுக்கு கீழுள்ளவர்கள்) தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சமூக விரோத செயல்பாடுகள் காரணமாக, தினமும் சராசரியாக எட்டு பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அத்தரவு தகவல் அளிக்கிறது. அவர்களில் மூன்று பேர் கடுமையான குற்றங்களைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுகிறது.
சிறார்களுக்கு கடும் தண்டனை வழங்க முடியாது என்பதை தெரிந்து கொண்டு சமூக விரோத கும்பல்கள் சட்டத்தில் உள்ள குறைபாடுகளைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
minors-increase-retired-cop-calls-for-review-of-juvenile-laws நாடு முழுவதும் பல கும்பல்கள், குற்றப் பின்னணி கொண்ட குடும்பங்கள் இந்த காரணத்திற்காகவே, தங்கள் குழந்தைகளை குற்றம் செய்ய வற்புறுத்துகின்றனர். காவல் மற்றும் சட்ட அமைப்பை நன்கு அறிந்த கடும் குற்றவாளிகள், குற்றத்திற்குப் பிறகும் குழந்தைகளை விடுவிப்பதில் வெற்றி பெறுகிறார்கள்.
இதை மாற்ற நாம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தியா மற்ற மேற்கத்திய நாடுகளிலிருந்து ஒரு விஷயத்தை கற்க வேண்டும். அங்கு சிறார்கள் குற்றத்தை செய்தால் கூட, அவர்களுக்குரிய தண்டனை வழங்கப்படுகிறது.
குற்றமிழைத்தோர் என்ன அடிப்படையில் தான் அவர்கள் கையாளப்படுகிறார்கள். சிறார்கள் கொடூரமான குற்றங்களைச் செய்தால், அவர்களின் பாதுகாவலர்களுக்கோ அல்லது பெற்றோருக்கோ அது குறித்த பொறுப்பு கூறல் கடமை இருக்க வேண்டும்.
சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் பொறுப்பு சரி செய்யப்பட வேண்டும். ஒருவித தடுப்பு நடவடிக்கையாக இருக்கும் என நான் நம்புகிறேன். நாடாளுமன்றம் இந்த குறையுள்ள சட்டங்களை மாற்றக் கோருவதற்கான நேரம் வந்துவிட்டது. நாம் மிக அவசரமாக சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என அவர் வலியுறுத்தினார்.