200 யூனிட் மின்சாரம் இலவசம்: மக்களுக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த கெஜ்ரிவால் - free current
டெல்லி: வீட்டுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் உள்ள மக்களுக்கு இனி 200யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். அதேபோல் 201யூனிட் முதல் 400யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோர்க்கு 50 விழுக்காடு மானியம் வழங்கப்படும். ஏற்கனவே பல மக்கள் நல திட்டங்களை கெஜ்ரிவால் அரசு அறிவித்துள்ள நிலையில், தற்போது இலவச மின்சார திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், முதலமைச்சர் கெஜ்ரிவால் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.