தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 22, 2020, 3:14 PM IST

ETV Bharat / bharat

கரோனா எண்ணிக்கை அதிகரிப்பதைக் கண்டு அஞ்ச வேண்டாம் - கெஜ்ரிவால்

டெல்லி: கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையைக் கண்டு மக்கள் அச்சமடைய வேண்டாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

aravind
aravind

நாடு முழுவதும் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த இன்று மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 341ஆக உயர்ந்துள்ள நிலையில் நோயால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு எண்ணிக்கை இன்று 6ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து போக்குவரத்து நடவடிக்கையை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், பல்வேறு மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து மக்கள் கூடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

தலைநகர் டெல்லியில் இதுவரை 32 பேர் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மகாராஷ்டிரா கேரளவுக்கு அடுத்தபடியாக டெல்லியில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகவுள்ளது.

இது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதை எண்ணி மக்கள் அச்சப்பட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து மக்கள் பதற்றம் கொண்டு அச்சப்படுவதைத் தவிர்த்துவிட்டு நாட்டு மக்கள் உத்வேகத்துடன் போரிட வேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:அதிகளவில் பொருள்கள் வாங்கி குவிப்பதைத் தவிருங்கள்'- இது இங்கிலாந்து செவிலியின் காணொலி

ABOUT THE AUTHOR

...view details