சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, 70 தொகுதிகளில் 62 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முதலமைச்சராக பதிவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், இன்று டெல்லி தலைமைச் செயலகத்திற்கு சென்ற அவர், மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் சேர்ந்து, மனிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், ராஜேந்திர பால் கவுதம், இம்ரான் ஹுசைன் ஆகியோரும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.