டெல்லியில் கடந்த ஜூன் 3ஆம் தேதி பெண்கள் பேருந்துகளிலும் மெட்ரோ ரயில்களிலும் இலவசமாகப் பயணிப்பதற்கான திட்டம் கொண்டுவரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். கடந்த அக்டோபர் 28ஆம் தேதி இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
பெண்களுக்கான இலவசப் பேருந்து சேவை: டெல்லி முதலமைச்சர் நேரில் ஆய்வு! - நேரில் ஆய்வு செய்த டெல்லி முதலமைச்சர்
டெல்லி: பெண்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணிப்பது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி கடந்த அக்டோபர் 28ஆம் தேதி முதல் டெல்லியில் உள்ள டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்துகள், கிளஸ்டர் பேருந்துகளில் பெண்கள் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக போக்குவரத்துத் துறைக்கு ரூ.479 கோடி கூடுதல் மானியம் வழங்க டெல்லி சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் நேற்று, டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் இலவச பயணம் குறித்து பெண்கள் என்ன நினைக்கிறார்கள்? இந்தத் திட்டத்தால் அவர்கள் பயனடைந்துள்ளனரா? என்பது குறித்து தெரிந்து கொள்ள பேருந்திலே பயணம் செய்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.