டெல்லியில் பாஜகவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப் கூறியதாவது:-
உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஒரு நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா வீடு வீடாக பரப்புரை மேற்கொண்டு மக்களுடன் உரையாடுவது இதுவே முதல்முறை.
இந்த சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கிறது.
எனக்கு யார் மீதும் தனிப்பட்ட பகை இல்லை. அரவிந்த் கெஜ்ரிவால் வளர்ச்சி அரசியலை விரும்பவில்லை. அவர் கம்யூனிசத்தின் உண்மையான நகலாக உள்ளார்.
இவ்வாறு பிப்லாப் குமார் தேப் கூறினார்.
கம்யூனிசத்தின் உண்மையான நகல் கெஜ்ரிவால்: பாஜக முதலமைச்சர் பரப்புரை - Arvind Kejriwal is a true copy of communists
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் கம்யூனிசத்தின் உண்மையான நகல் என்று திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப் கூறினார்.
Arvind Kejriwal is a true copy of communists, says Tripura Chief Minister
இதையும் படிங்க: டெல்லி தேர்தல்: பாஜக அவசர ஆலோசனை