தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடு வழங்கிய கெஜ்ரிவால்! - மருத்துவர் ஜோகிந்தர் சவுத்ரியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு

டெல்லி: கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த மருத்துவர் ஜோகிந்தர் சவுத்ரியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடுக்கான காசோலையை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கினார்.

arvind-kejriwal-hands-over-rs-1-crore-cheque-to-family-of-doctor-who-died-of-covid-19
arvind-kejriwal-hands-over-rs-1-crore-cheque-to-family-of-doctor-who-died-of-covid-19

By

Published : Aug 4, 2020, 10:18 PM IST

பாபா சாஹேப் அம்பேத்கர் (பி.எஸ்.ஏ) மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், தற்காலிக அடிப்படையில் இளநிலை மருத்துவராகப் பணியாற்றி வந்த ஜோகிந்தர் சவுத்ரி, கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். பின்னர், இவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து, ஜூலை எட்டாம் தேதி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். ஒரு மாத சிகிச்சையில் இருந்த மருத்துவர் ஜோகிந்தர் சவுத்ரி அண்மையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்தைச் சந்தித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடுக்கான காசோலையை வழங்கினார். மேலும், டெல்லி அரசு அவர்களது குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார். இதுதொடர்பான தகவலை கெஜ்ரிவால் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details