டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "முதல்கட்டமாக தற்போது டெல்லியில் 100 இடங்களில் வைஃபை வசதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 16ஆம் தேதி முதல் பயனாளர்கள் இந்த இலவச இணையச் சேவையைப் பயன்படுத்த முடியும். மேலும், அடுத்த ஒவ்வொரு வாரத்திலும் 300 புதிய இடங்களில் இந்த வைஃபை சேவை விரிவாக்கம் செய்யப்படும்" என்று அறிவித்திருந்தார்.
இதன்மூலம், ஒவ்வொரு பயனாளரும் 150mbs வேகத்தில் மாதத்திற்கு 15 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்த முடியும். அதிகபட்சமாக ஒரு இடத்தில் 200 பயனாளர்கள் ஒரே நேரத்தில் இலவச இணைய சேவையைப் பயன்படுத்தமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக சார்பில் கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றவருமான கவுதம் கம்பீர் கூறுகையில், "டெல்லி முதலமைச்சர் மீண்டும் மக்களிடம் பொய் சொல்லியுள்ளார். நான்கரை ஆண்டுகளுக்கு முன்னரும் அவர் இலவச வைஃபை பற்றி இதையேதான் கூறினார். இப்போது தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரும் அதையேதான் கூறுகிறார். தேர்தல் நெருங்கி வருவதால், அவர் இதுபோல வாக்கு வங்கி அரசியிலில் ஈடுபட்டுள்ளார்" என்று அரவிந்த் கெஜ்ரிவாலை காட்டமாக விமர்சித்தார்.
டெல்லி முதலமைச்சரின் அறிவிப்பு டெல்லி சட்டப்பேரவைக்கு 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “74 வயதில் 105 நாட்கள் சிறை வாசம்” ஜாமீன் பெற்றார் ப.சிதம்பரம்.!