சமூக வலைத்தளங்களில் நேற்றிரவு முதல் சர்ச்சைக்குரிய ஒரு வீடியோ பரவி வருகிறது. அந்த வீடியோவில் வெளிநாட்டில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் பங்கேற்ற எழுத்தாளர் அருந்ததி ராய், காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசுகையில், "காஷ்மீர், மணிப்பூர், நாகலாந்து போன்ற பகுதிகளில் அரசுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். இந்தியா என்று ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றதோ, அடுத்த கணமே இந்தியா காலனியாதிக்க நாடு போல நடந்துகொள்ள ஆரம்பித்துவிட்டது." என்றார்.
காஷ்மீர் விவகாரம்: அருந்ததி ராய் மீது நெட்டிசன்கள் கோபம்! - காஷ்மீர் விவகாரம்: அருந்ததி ராய்
காஷ்மீர் விவகாரத்தில் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் கூறிய கருத்து சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவர், "இந்தியா எனப்படும் ஜனநாயக நாட்டில்தான் சொந்த மக்களுக்கு எதிராகவே பாதுகாப்புப் படையினர் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் கூட சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக ராணுவத்தைக் களமிறக்கியது இல்லை. சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட அமைப்பை திருப்திப்படுத்துவதற்காகவே இந்தியா இதுபோல செயல்பட்டுவருகிறது" என்று பேசியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அருந்ததி ராய் கூறிய கருத்துக்கு எதிராக ட்விட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.