முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக் குறைவால் சிகிச்சைக்காக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். அதன்பின், சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 24ஆம் தேதி அவர் காலமானார். அருண் ஜேட்லியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அருண் ஜேட்லிக்கு சிலை நிறுவப்படும் - நிதிஷ் குமார் - சிலை
பாட்னா: மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு பிகாரில் சிலை நிறுவப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பிகார் முதலமைச்சர்நிதிஷ் குமார், முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு பிகாரில் சிலை நிறுவப்படும் எனவும், பிகாரில் எங்கு சிலை நிறுவப்படும் என்று முடிவு செய்தபின், இடத்தின் பெயர் அறிவிக்கப்படும் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அருண் ஜேட்லியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் தெரிவித்தார். சமீபத்தில், புகழ்பெற்ற டெல்லி ஃபெரோஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்திற்கு, அருண் ஜேட்லி மைதானம் என பெயரிடப் போவதாக டெல்லி கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.