ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுவதாக மாநிலங்களவையில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இதன்மூலம் ஜம்மு - காஷ்மீர், லடாக் ஆகிய இரு பகுதிகளும் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாக தெரிவித்தார்.
இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, சட்டப்பிரிவு 370 தொடர்பான மத்திய அரசின் முடிவு இந்திய ஒருங்கிணைப்புக்கான ஒரு முக்கியமானது. இந்த முடிவால் மக்களுக்கு அதிக நன்மை ஏற்படும். காஷ்மீரில் தொழிற்சாலைகளும் கல்வி சார்ந்த தனியார் நிறுவனங்களும் அதிகமாக உருவாக்கப்படும். இத்தனை ஆண்டுகளாக காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் செய்துவந்த அரசியல், இந்த சட்டப்பிரிவை நீக்கியதன் மூலம் முடிவுக்கு வரும்.