மாநில தலைமை செயலகத்தில் கல்வித்துறை செயலர் அன்பரசு செய்தியாளர்களிடம் கூறுகையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலனைக் கருத்தில்கொண்டு பொறியியல், கலை அறிவியல் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க ஒரே நேரத்தில் ஆன்லைனில் பதிவு செய்யும் முறை கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - கல்வித்துறை செயலர் - education secertary
புதுச்சேரி: 2019-20 கல்வியாண்டில் இளங்கலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை முதல் வருகின்ற 25ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை செயலர் அறிவித்துள்ளார்.
கல்வித்துறை செயலர்
அதன்படி, 2019-20 கல்வியாண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை முதல் வருகின்ற 25ஆம் தேதிவரை கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான செண்டாக் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், நீட்தேர்வு சேர்க்கை குறித்த அறிவிப்பு பின்னர் தனியாக வெளியிடப்படும். இந்தாண்டைப் பொருத்தவரை மாநிலத்தில் உள்ள அரசு கல்லூரிகள் மூலம் 9,715 இடங்கள் நிரப்பப்பட உள்ளது” என தெரிவித்தார்.