இந்தியாவின் தலைச்சிறந்த ஓவியக் கலைஞர்களில் ஒருவர் அக்பர் பதம்ஸி. நேற்றிரவு கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் காலமானார். 91 வயதான இவர், தனது இறுதி நாட்களை ஈஷா ஆசிரமவாசியாக வாழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவிற்கு ஈஷா ஆசிரமவாசிகள், ஜக்கி வாசுதேவ் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
"அக்பர் பதம்ஸி, வண்ணம் மற்றும் கலைநயத்தின் வித்தகர், வாழ்வின் கடைசிப்பகுதியை எங்களுடன் ஈஷா யோகா மையத்தில் கழித்தது எங்கள் அதிர்ஷ்டம். உங்கள் வர்ணஜாலத்தை, வரும் தலைமுறைகள் பலவும் கண்டு ரசிக்கும், ஊக்கம்பெறும் " என்று ஜக்கி வாசுதேவ் தனது ட்விட்டர் பதிவில் தனது இரங்கலை பதிவுசெய்துள்ளார்.