ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், ஸ்ரீநகர் மக்களவையின் தற்போதைய உறுப்பினருமான பரூக் அப்துல்லா சட்டப்பிரிவு 370 தொடர்பாக மக்களவையில் உரையாற்றினார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பின் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் விடுதலைக்குப்பின், மீண்டும் மக்களவை கூட்டத் தொடரில் தற்போது பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் சட்டப்பிரிவு நீக்கம் தொடர்பாக அவர், "காஷ்மீரில் தற்போதும் என்கவுன்டர் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. அங்கு தொடர்ந்து அமைதியற்ற சூழல் நிலவிவருகிறது.