கரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இதுவரை 3,32,424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,520 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. பொருளாதாரம் பெரும் பாதிப்படைந்துள்ளது.
அறியாமையை விட ஆபத்தானது ஆணவம் - ராகுல் காந்தி - Arrogance more dangerous than ignorance
டெல்லி: 'அறியாமையை விட ஆபத்தானது ஆணவம்' என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மேற்கோளை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
Raga
இந்நிலையில், புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மேற்கோளை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி மத்திய அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஊரடங்கு முழுவதுமாக தோல்வி அடைந்துள்ளது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் - அறியாமையை விட ஆபத்தானது ஆணவம் என்ற கூற்றோடு முழுவதுமாக பொருந்துகிறது" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அசாம் தீ விபத்து: சிங்கப்பூர் பேரிடர் மேலாண்மைக் குழுவுடன் கைகோர்த்த நிபுணர்கள்