புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த அம்பகரத்தூரில் 1989ஆம் ஆண்டு சிதம்பரத்தை சேர்ந்த 17 பேர் கொண்ட கும்பல் அம்பகரத்தூரில் ஒரு பெண்ணை கடத்தி செல்ல முயன்றுள்ளனர்.
27 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி கைது!
புதுச்சேரி : 27 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளியை திருநள்ளாறு காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அப்போது திருநள்ளாறு காவல்துறையினர் அவர்களை கைது செய்து 17 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். காரைக்கால் நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணை நடைப்பெற்று வந்தது. 17 பேர் கொண்ட கும்பலில் ஒருவரான சந்திரசேகர் என்பவர் 1993ஆம் ஆண்டு தலைமறைவாகினார். அதைத் தொடர்ந்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, திருநள்ளாறு காவல் நிலைய காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், சந்திரசேகர் சிதம்பரத்தில் உள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனையடுத்து அங்கு சென்ற தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.