சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் (கோவிட் 19) தொற்று, தற்போது இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவில் ஏற்கனவே 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுள்ள நிலையில், தற்போது டெல்லியைச் சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் - சுகாதாரத்துறை அமைச்சகம்
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்-சுகாதாரத்துறை அமைச்சகம்
இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். இது போன்ற மக்கள் கூடும் நிகழ்ச்சிகளை ஒத்திவைக்க வேண்டும். இது குறித்து சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கொரோனாவால் கர்நாடகாவில் வீட்டுக்காவல்!