தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சூரிய கிரகணத்தைக் காண 40 இடங்களில் ஏற்பாடு! - சூரிய கிரகணத்தைக் காண புதுச்சேரியில் 40 இடங்களைகளில் ஏற்பாடு

புதுச்சேரி: சூரிய கிரகணத்தை பொதுமக்கள் காண்பதற்காக 40 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது.

solar eclipse
சூரிய கிரகணம்

By

Published : Dec 24, 2019, 7:30 PM IST

புதுச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும் புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் துறை சார்பில், துணை தலைவர் மதிவாணன் இன்று புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்;

டிசம்பர் 26ஆம் தேதி காலை 8:08 மணி முதல் 11:19 மணி வரை, மொத்தம் 3 மணிநேரம் 11 நிமிடங்கள் சூரிய கிரகணம் காட்சியளிக்க உள்ளது. இதற்காக புதுவை அறிவியல் இயக்கம் புதுவை அரசின் அறிவியல் தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து புதுவையில் 40 இடங்களில் இதை காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த அறிவியல் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் துறையினர்

புதுச்சேரியில் காந்தி சிலை, பாகூர், லாஸ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்குப்பிறகு இந்த சூரிய கிரகணத்தை 2031ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி காண முடியும். இதற்காக பதினொரு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:நீல வண்ண வானை அழகாக்கும் சூரிய கிரகணம்: தெரிந்து கொள்வோம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details