தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வந்தே பாரத் திட்டத்தில் மேலும் 870 விமானங்கள்!

டெல்லி: ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டத்தின்கீழ்  கூடுதலாக 870 விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

around-870-chartered-flights-transported-about-two-lakh-passengers-during-lockdown-says-dgca
around-870-chartered-flights-transported-about-two-lakh-passengers-during-lockdown-says-dgca

By

Published : Jun 16, 2020, 11:29 AM IST

உலகையே அச்சுறுத்திய கரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு அமல்படுத்திய ஊரடங்கு பல தளர்வுகளுடன் ஜூன் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கின் காரணமாக வெளிநாட்டு விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப முடியமால் தவித்துவருகின்றனர்.

இவர்களை மீட்கும் வகையில் மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன்மூலம் பல்வேறு நாடுகளில் சிக்கித்தவித்த இந்தியர்களைத் தாயகம் கொண்டுவந்தது.

இதன் தொடர்ச்சியாக, வெளிநாட்டு விமான நிறுவனங்களின் உதவியோடு, ஊரடங்கால் சிக்கித்தவிக்கும் இந்தியர்களைத் தாயகம் கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

இந்நிலையில், வந்தே பாரத் திட்டத்தின்கீழ் கூடுதலாக 870 விமானங்களைச் சேர்ப்பதற்கு விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் சுமார் இரண்டு லட்சம் பயணிகள் பயன்பெறுவர்கள் என்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மீட்பு நடவடிக்கைகளில் பங்குபெறும் விமான நிறுவனங்கள் குறித்த தவலையும் அந்த அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், “கத்தார் ஏர்வேஸ் -81, கே.எல்.எம். டச்சு -68, குவைத் ஏர் -41, பிரிட்டிஷ் ஏர்வேஸ் -39, ஃப்ளைடூபாய் -38, ஏர் பிரான்ஸ் -32, ஜசீரா -30, ஏர் அரேபியா -20, வளைகுடா ஏர் -19, இலங்கை -19, பிமான் பங்களாதேஷ் -15, கொரிய ஏர் -14, டெல்டா -13, சவுடியா -13, ஏர் நிப்பான் -12 உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் இந்த நடவடிக்கைகளில் பங்கேற்கின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details